கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் தனிமைப் படுத்திக்கொள்வது அவசியம் : காவல் ஆணையர் விஸ்வநாதன்

 

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் தனிமைப் படுத்திக்கொள்வது அவசியம் : காவல் ஆணையர் விஸ்வநாதன்

மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள உரியப் பாதுகாப்பு முறைகளைக் கையாளுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. அதிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள உரியப் பாதுகாப்பு முறைகளைக் கையாளுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்றும் முடிந்த வரை வெளியே செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சானிடைசர்கள் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ளுமாறும் தொடர்ந்து மக்களுக்கு அரசு வலியுறுத்தி வருகிறது. 

ttn

இந்நிலையில் இன்று பல்லாவரம் ரேடியஸ் சாலையில்  88 புதிய கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்பு அறை, போக்குவரத்து வாகன சோதனை குடோன் ஆகியவற்றைச் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் துவக்கி வைத்தார். அதற்குப் பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக அமைச்சர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியில் இப்பகுதியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்றும் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால் தம்மை தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.