கொரோனா வைரஸ் விளைவு: பி.எஸ் 4 வாகனங்கள் விற்பனை 2 மாதங்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு

 

கொரோனா வைரஸ் விளைவு: பி.எஸ் 4 வாகனங்கள் விற்பனை 2 மாதங்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு

கொரோனா தொற்றுநோய் விற்பனையை பாதிதுள்ளதால் இந்தியாவின் டீலர்ஷிப் சங்கம் உச்சநீதிமன்றத்தில் பி.எஸ்.4 வாகனங்களை விற்க காலநீட்டிப்பு கேட்டுள்ளது.

டெல்லி: கொரோனா தொற்றுநோய் விற்பனையை பாதிதுள்ளதால் இந்தியாவின் டீலர்ஷிப் சங்கம் உச்சநீதிமன்றத்தில் பி.எஸ்.4 வாகனங்களை விற்க காலநீட்டிப்பு கேட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோயின் பொருளாதார விளைவுகள் வாகனத் துறையையும் விட்டு வைக்கவில்லை. சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளால் மார்ச் 31-ஆம் தேதி காலக்கெடுவுக்குள் டீலர்ஷிப்கள் தங்கள் பி.எஸ் 4 வாகனங்களை விற்பதை கடினமாக்கியுள்ளன.

ttn

அதனால் தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில், பிஎஸ் 4 வாகனங்களை விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்கும் மே 31-ஆம் தேதி வரை அனுமதிக்குமாறு ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பு (ஃபாடா) உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. தற்போதைய காலக்கெடுவின்படி, ஏப்ரல் 1 முதல் பி.எஸ் 4 இணக்கமான வாகனங்கள் எதையும் விற்கவோ பதிவு செய்யவோ முடியாது. இதனால் டீலர்ஷிப்களில் பி.எஸ் 4 வாகனங்களின் விற்கப்படாத சரக்குகள் அதிகளவில் தேக்கமடையும்.