கொரோனா வைரஸ் வலையில் மொத்தம் 119 நாடுகள் – இப்போதைக்கு தப்பிக்க முடியாது!

 

கொரோனா வைரஸ் வலையில் மொத்தம் 119 நாடுகள் – இப்போதைக்கு தப்பிக்க முடியாது!

கொரோனா வைரஸ் இதுவரை 119 நாடுகளுக்கு பரவியுள்ளது.

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் இதுவரை 119 நாடுகளுக்கு பரவியுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 4298-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 22 பேர் உயிரிழந்து உள்ளனர். அதனால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 3158 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரம் கடந்துள்ளது.

ttn

இந்த நிலையில், கொரோனா வைரஸ் இதுவரை 119 நாடுகளுக்கு பரவியுள்ளது. குறிப்பாக சீனாவுக்கு வெளியே இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய 3 நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா வைரஸால் உலக பொருளாதாரம் பெருமளவில் சரிந்து காணப்படுகிறது. பல்வேறு நாட்டு மக்கள் பீதியுடனே தெருக்களில் வலம் வருகிறார்கள். சுகாதார முகமூடி, கிருமி நாசினி பொருட்கள், சானிடைசர் போன்ற சில குறிப்பிட்ட பொருட்களின் தேவை அதிகரித்து இருப்பதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.