கொரோனா வைரஸ் வடிவில் காரை உருவாக்கிய ஹைதராபாத் கார் அருங்காட்சியக உரிமையாளர்…

 

கொரோனா வைரஸ் வடிவில் காரை உருவாக்கிய ஹைதராபாத் கார் அருங்காட்சியக உரிமையாளர்…

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவற்காக ஹைதராபாத்தை சேர்ந்த கார் அருங்காட்சியக உரிமையாளர் ஒருவர் கொரோனா வைரஸ் வடிவில் கார் ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த காரில் 40 கி.மீட்டர் தூரம் பயணிக்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவற்காக பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். கொரோனா ஹெல்மேட், சாலைகளில் கொரோனா தொடர்பான வாசகங்கள் என பல்வேறு வித்தியாசமான முறைகளில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 

ஹெல்மெட் மாடல் கார்

இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் தோற்றத்தில் ஹைதராபாத்த சேர்ந்த கார் அருங்காட்சிய உரிமையாளர் ஒருவர் மாற்றியமைத்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த கார் அருங்காட்சியக உரிமையாளர் சுதாகர். இவர் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கொரோனா வைரஸ் மாடலில் 100சிசி என்ஜின் கொண்ட ஒரு நபர் அமரும் காரை வடிவமைத்துள்ளார். இந்த காரில் 40 கி.மீட்டர் தூரம் பயணிக்கலாம்.

சிகரெட் வடிவ பைக்

இது குறித்து சுதாகா கூறுகையில், கொரோனா வைரஸ் வடிவிலான காரை நாளை (இன்று) வெளியிடுகிறோம். இது ஹைதராபாத் சாலைகளில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், கொரோனா வைரஸின் ஆபத்து குறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதற்கும் உதவும். மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். இதற்கு முன் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காக காண்டம் மாடல், தலை பாதுகாப்பை வலியுறுத்தி ஹெல்மெட் மாடல், மக்கள் சிகரெட் பழக்கத்தை விடுவதற்கா சிகரெட் மாடல் வாகனங்களை வடிவமைத்து உள்ளேன் என தெரிவித்தார்.