கொரோனா வைரஸ்… வங்கி இணைப்பை ஒத்திவையுங்க…. கோரிக்கையை கண்டு கொள்ளாத மத்திய அரசு

 

கொரோனா வைரஸ்… வங்கி இணைப்பை ஒத்திவையுங்க…. கோரிக்கையை கண்டு கொள்ளாத மத்திய அரசு

ஏப்ரல் 1ம் தேதி முதல் மெகா வங்கி ஒருங்கிணைப்பு நடவடிக்கை அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கி ஆகிய 10 பொதுத்துறை வங்கிகளை 4 பெரிய வங்கிகளாக மாற்றப்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. மேலும் 2020 ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்தது.

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு

10 பொதுத்துறை வங்கிகளை 4 பெரிய வங்கிகளாக ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தீவிரவமாக பரவி வருவதால் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை ஒத்திவைக்கும்படி அனைத்து இந்தியா வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த புதன்கிழமைன்று கோரிக்கை விடுத்து இருந்தன. ஆனால் அதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. திட்டமிட்டப்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் வங்கிகளை இணைப்பு நடவடிக்கை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைப்புக்கான அறிவிப்பு

வங்கி துறை செயலளர் டெபாசிஸ் பாண்டா இது குறித்து கூறுகையில், இணைப்பு நடவடிக்கை திட்டமிட்டப்படி அதன் பாதையில் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொற்றுநோயால் வீசப்பட்டுள்ள சவால்களை வங்கி துறையால் சந்திக்க முடியும். பணப்பரிமாற்றம் உள்ளிட்ட கவலைக்குரிய விஷயங்களை பொறுத்தவரை தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். வங்கிகள் ஒருங்கிணைப்பு நடவடிக்கை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.