கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : 24 மணி நேரக் கட்டுப்பாட்டு மையம் அமைப்பு!

 

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : 24 மணி நேரக் கட்டுப்பாட்டு மையம் அமைப்பு!

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் இந்த பாதிப்பு இல்லாத நிலையில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய நபர்கள் உரியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 31 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ்பாதிப்பின் அறிகுறி இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் இந்த பாதிப்பு இல்லாத நிலையில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய நபர்கள் உரியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் கொரோனா இல்லை என்றும் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். 

ttn

சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் இதுவரை 96,729 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமே 400க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பற்றிய எந்த தகவலுக்கும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தொலைப்பேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.