கொரோனா வைரஸ் – முடக்கம் எதிரோலி……சபரிலை அய்யப்பன் திருவிழா ரத்து….. 8ஆம் வகுப்பு வரை பாஸ்

 

கொரோனா வைரஸ் – முடக்கம் எதிரோலி……சபரிலை அய்யப்பன் திருவிழா ரத்து….. 8ஆம் வகுப்பு வரை பாஸ்

கொரோனா வைரஸ் மற்றும் முடக்கம் எதிரொலியாக சபரிமலை அய்யப்பன் கோயிலில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

முடக்கம் காரணமாக மார்ச் 29ம் தேதி  தொடங்க இருந்த சபரிமலை அய்யப்பன் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் காலவரையின்றி செயல்படாது. அவசர வழக்குகள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவேடு நடைமுறையின் முதல் கட்ட மக்கள்தொகை கணக்கெடு பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேந்திரியா வித்யாலயா

நாடு முழுவதும் முடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து ஏப்ரல் 14ம் தேதி வரை ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேந்திரியா வித்யாலயாக்கள் பள்ளிகளில் ஆண்டு தேர்வு எழுதினாலும், எழுதவில்லை என்றாலும் இந்த ஆண்டு 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் பாஸ்.
கொரோனா வைரஸ் பரவுவதால், ஜெய்பூரில் தினமும் 2 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை அம்மாநகராட்சி நேற்று தொடங்கியது. 

சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ்

கொரோனா வைரசால் உலகம் முழுவதுமாக 260 கோடி மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
சீனாவில் தற்போது புதிதாக ஒரு வைரஸ் பரவி வருவதாகவும், அதற்கு ஒருவர் பலியாகி உள்ளதாகவும் தகவல்.