கொரோனா வைரஸ் பீதி: அர்ஜென்டினா நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி சரிவு

 

கொரோனா வைரஸ் பீதி: அர்ஜென்டினா நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி சரிவு

அர்ஜென்டினா நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி பெருமளவு சரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாராகுவே: அர்ஜென்டினா நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி பெருமளவு சரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2592 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 150 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ttn

அர்ஜென்டினா நாட்டில் இருந்து அதிகமாக மாட்டிறைச்சி வாங்கி வந்த நாடாக சீனா இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனா துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக அர்ஜென்டினாவில் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சுமார் 31 ஆயிரம் டன்னாக மாட்டிறைச்சி விற்பனை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.