கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தவிக்கும் மகாராஷ்டிரா… பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடம்…

 

கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தவிக்கும் மகாராஷ்டிரா… பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடம்…

நம் நாட்டில் கொரோனா வைரஸால் மகாராஷ்டிரா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர்பலியில் அந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. தினந்தோறும் அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது, அங்கு கொரோனா பரவுவதை தடுக்க அந்த மாநிலத்தில் அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.

மருத்துவர்கள்

நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் புதிதாக 113 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்றுவரை அந்த மாநிலத்தில் ஒட்டு மொத்த அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 748ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்த மாநிலத்தில் மட்டும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் 45ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ்

நம் நாட்டில் கொரோனா பாதிப்பில முதல் 3 இடத்தில் முறையே மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகியவை உள்ளன.
மாநிலங்கள்    கொரோனா பாதிப்பு
மகாராஷ்டிரா    748 பேர்
தமிழ்நாடு          571 பேர்
டெல்லி              503 பேர்