கொரோனா வைரஸ்…. பாதிப்பு 360ஆக உயர்வு….. 82 மாவட்டங்கள் முடக்கம்…. கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரம்

 

கொரோனா வைரஸ்…. பாதிப்பு 360ஆக உயர்வு….. 82 மாவட்டங்கள் முடக்கம்…. கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் அதிகாரபூர்வமாக அல்லது அதிகாரபூர்வமற்ற வகையில் 82 மாவட்டங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 360ஆக உயர்ந்துள்ளது.

தொற்று நோயான கோவிட்-19 அல்லது கொரோனா வைரஸ் நம் நாட்டில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் கழிந்த பிறகும் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 360ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் 7 பேரை உயிர்பலி வாங்கியுள்ளது.

மாவட்டங்கள் முடக்கம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள பாலைவனம் போல் வெறிச்சோடி கிடந்தது. நேற்று மட்டும் கொரோனா வைரசுக்கு 3 பேர் பலியானதை தொடர்ந்து மாநில அரசுகள் வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்தன. இதனையடுத்து நாடு முழுவதுமாக மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களை அதிகாரப்பூர்வமாக முடக்க முடிவு செய்தன. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற வகையில் மேலும் 7 மாவட்டங்கள் முடக்கப்பட்டதாக தகவல். அந்த மாவட்டங்களில் போக்குவரத்தும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டங்கள் முடக்கம்

மகாராஷ்டிரா, கேரளா, அரியானா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்பட குறைந்தபட்சம் 22 மாநிலங்கள் முழுமையாக அல்லது பகுதியாகவோ மாறுப்பட்ட காலங்களுக்கு முடக்கத்தை அறிவித்துள்ளன. மாநிலங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.