கொரோனா வைரஸ் பாதிப்பு: தற்காலிகமாக சீனர்களுக்கு அனுமதி இல்லை – அறிவிப்பு பலகை வைத்த இலங்கை உணவு விடுதி

 

கொரோனா வைரஸ் பாதிப்பு: தற்காலிகமாக சீனர்களுக்கு அனுமதி இல்லை – அறிவிப்பு பலகை வைத்த இலங்கை உணவு விடுதி

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தற்காலிகமாக சீனர்களுக்கு அனுமதி இல்லை என இலங்கையை சேர்ந்த ஒரு உணவு விடுதி அறிவிப்பு பலகை வைத்துள்ளது.

கொழும்பு: கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தற்காலிகமாக சீனர்களுக்கு அனுமதி இல்லை என இலங்கையை சேர்ந்த ஒரு உணவு விடுதி அறிவிப்பு பலகை வைத்துள்ளது.

2020-ஆம் ஆண்டின் தொடக்கமே சீனாவுக்கு பெரிய தலைவலியாக அமைந்து விட்டது. கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டில் மிக வேகமாக பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு முழு வீச்சோடு பணியாற்றி வருவதாக சீன அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொரோனா வைரஸ் ஒரு அரக்கனை போல மக்களை கொடூரமாக வேட்டையாடி வருவதாக அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை 170-ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் ஆயிரத்து 737 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ttn

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சீனர்களுக்கு தற்காலிகமாக அனுமதி இல்லை என இலங்கை நாட்டில் கொழும்புவை சேர்ந்த ஒரு உணவு விடுதி அறிவிப்பு பலகை வைத்துள்ளது. மேலும் சீனர்கள் பயணிக்கும் வாகனங்களில் பயணிக்க இலங்கை பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அனைத்து சீனர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் என்று கருதக் கூடாது என மக்களுக்கு இலங்கை சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் அறிவுறுத்தி உள்ளார்.