‘கொரோனா வைரஸ் பாதிப்பு’…சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை !

 

‘கொரோனா வைரஸ் பாதிப்பு’…சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை !

இந்த புதிய வகை காய்ச்சலால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், 540 பேருக்கு இந்த காய்ச்சல் பரவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புத்தாண்டு தொடங்கியதிலிருந்து  ‘கொரோனா வைரஸ்’ என்று அழைக்கப்படும் வைரஸ் நோய் காய்ச்சல் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை காய்ச்சலால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், 540 பேருக்கு இந்த காய்ச்சல் பரவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ttn

இதனால் சீனாவில் உள்ள வுகான் நகரின் அனைத்து போக்குவரத்துகளும் முடக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்த காய்ச்சல் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்றும் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நோய் பரவி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

இந்தியாவில் கொரானோ வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, சீனாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ttn

இதனால், அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல, சென்னை விமான நிலையத்திலும் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு ஸ்க்ரீனிங் எனப்படும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.