கொரோனா வைரஸ் பாதிப்பு; சீனாவில் தனது அலுவலகங்களை தற்காலிகமாக மூடிய கூகுள் நிறுவனம்!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு; சீனாவில் தனது அலுவலகங்களை தற்காலிகமாக மூடிய கூகுள் நிறுவனம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் உள்ள தனது அலுவலகங்களை கூகுள் நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது.

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் உள்ள தனது அலுவலகங்களை கூகுள் நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது.

2020-ஆம் ஆண்டின் தொடக்கமே சீனாவுக்கு பெரிய தலைவலியாக அமைந்து விட்டது. கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டில் மிக வேகமாக பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு முழு வீச்சோடு பணியாற்றி வருவதாக சீன அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொரோனா வைரஸ் ஒரு அரக்கனை போல மக்களை கொடூரமாக வேட்டையாடி வருவதாக அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை 170-ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் ஆயிரத்து 737 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ttn

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் உள்ள தனது அலுவலகங்களை கூகுள் நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது. ஹாங்காங் மற்றும் தைவானிலும் தனது கிளைகளை அந்நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது. தற்போதைக்கு அங்கு கூகுள் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பரப் பிரிவுகள் மட்டுமே இயங்கி வருகின்றன. மேலும் கூகுள் மட்டுமில்லாமல் பல்வேறு நிறுவனங்கள் சீனாவில் உள்ள தங்களது கிளைகளை தற்காலிகமாக மூடியுள்ளன. இதனால் பல ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.