கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: சீனாவில் இந்திய தூதரகம் உதவி எண்கள் அறிவிப்பு

 

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: சீனாவில் இந்திய தூதரகம் உதவி எண்கள் அறிவிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்காக உதவி எண்கள் அறிவித்துள்ளது.

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்காக உதவி எண்கள் அறிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 25 பேர் பலியாகி உள்ளதாகவும், 830 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், சீனாவில் வசிக்கும் இந்தியர்களின் நிலை குறித்து அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அறிந்து கொள்வதற்காக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளது.

ttn

உதவி எண்கள்: +8618612083629, +8618612083617

கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள விரும்புவோர் மேற்கண்ட உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து ஹுபெய் மாகாணம், வுகான் நகரிலுள்ள இந்தியர்கள் மற்றும் அவர்களது உறவினர்களிடமிருந்து இந்தியத் தூதரகம் விவரங்களைப் பெற்று வருகிறது. பெய்ஜிங் மற்றும் வுகானில் உள்ள சீன அதிகாரிகளுடனும், ஹுபெய் மாகாணத்தில் உள்ள இந்தியர்களுடனும் தூதரகம் தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.