கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை அவசியம் :கமல்ஹாசன் வீடியோ

 

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை அவசியம் :கமல்ஹாசன் வீடியோ

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கொரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த கொடிய வைரஸ் காற்றில் பரவும் தன்மை கொண்டதால், பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதனால் வரும் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி, வணிக  வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கொரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ttn

அந்த வீடியோவில், “கொரோனா வைரஸ் பாதிப்பு 4, 5 ஆவது வாரத்தில் அதிகமாக பரவுகிறது என்று மற்ற நாடுகளின் மூலம் தெரிந்து கொள்கிறோம். ஏன்?… பாதிக்கபட்ட சிலர் அதனை பற்றி தெரியாமல் பொது இடங்களுக்கு செல்வதால்5 பேருக்கு இருக்கும் பாதிப்பு 25 ஆக உயருகிறது. அது இன்னும் 100 பேருக்கு பரவாமல் தடுக்க ஒரே வழி விலகி இருத்தல். அதிகமான விழிப்புணர்வு தேவைப்படும் 4 ஆம் வாரத்தில் தமிழ்நாடு இப்போது இருக்கிறது. அதனால் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே செல்ல வேண்டாம். இதன் மூலம் கொரோனா பாதிப்பை தடுக்க இயலும்.

 

கொரோனா இருந்தாலே இறந்து விடுவார்கள் என்பது தவறு. அது அவரவர் உடல்நிலையை பொருத்து மாறுபடுகிறது. அதனால் எல்லாரிடமும் இருந்து விலகி இருத்தல் சிறந்தது. வீட்டிலேயே இருங்கள். குடும்பத்தினருடன் உரையாடுங்கள். பிடித்தவர்களிடம் போனில் பேசுங்கள். ஆனால், வெளியே செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.வந்தால் செய்வதை வரும் முன்பே செய்வோம். விலகி இருங்கள். நமக்கு வராது என்று அசட்டு தைரியத்துடன் இருக்க வேண்டாம். முன்னெச்சரிக்கை தான் முக்கியமான விஷயம்.” என்று கூறியுள்ளார்.