கொரோனா வைரஸ் பாதிப்பால் அடுத்த ஐபோன் மாடல் வெளியீடு தாமதமா?

 

கொரோனா வைரஸ் பாதிப்பால் அடுத்த ஐபோன் மாடல் வெளியீடு தாமதமா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அடுத்த ஐபோன் மாடலின் வெளியீடு தாமதமாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அடுத்த ஐபோன் மாடலின் வெளியீடு தாமதமாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2004 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ttn

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 136 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் மாடலின் வெளியீடு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமாவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் 9 அல்லது ஐபோன் எஸ்.இ 2 என்ற பெயர்களில் அடுத்த ஐபோன் மாடல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற மார்ச் 31-ஆம் தேதிவாக்கில் புதிய ஐபோன் மாடலின் அறிமுகம் நிகழ்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.