கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் நாளை டிஸ்சார்ஜ்!

 

கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் நாளை டிஸ்சார்ஜ்!

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தனி சிகிச்சை பிரிவை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  “திருச்சி அரசு மருத்துவமனையின் தனி சிகிச்சைப் பிரிவு மிக சிறப்பாக செயல்படுகிறது. தற்போது கொரோனா அறிகுறியால் திருச்சி அரசு மருத்துவமனையில் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தனி சிகிச்சை பிரிவை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  “திருச்சி அரசு மருத்துவமனையின் தனி சிகிச்சைப் பிரிவு மிக சிறப்பாக செயல்படுகிறது. தற்போது கொரோனா அறிகுறியால் திருச்சி அரசு மருத்துவமனையில் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சியில் அனுமதிக்கப்பட்டுள்ள யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை இருந்தபோதிலும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

vijayabaskar

தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்க அறிவுறுத்தி உள்ளோம். அந்த வார்டுகளை அரசு சார்பில் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்படும். கேரளத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம். கொரோனா பாதிப்பை கண்டறியும் பரிசோதனை மையங்கள் திருவாரூர் மற்றும் திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் நான்கு இடங்களில் அமைக்க பட உள்ளோம். தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் குணம் அடைந்தநிலையில்  நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார்” என தெரிவித்தார்.