கொரோனா வைரஸ் பாதித்த நபரை சுட்டுக்கொன்ற வடகொரியா!

 

கொரோனா வைரஸ் பாதித்த நபரை சுட்டுக்கொன்ற வடகொரியா!

உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 1357 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவியதாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்தது. அந்தக் சீனா மட்டுமின்றி அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைவிரித்தாடுகிறது.

corano

இந்நிலையில் வடகொரியாவின் வர்த்தக அதிகாரி ஒருவர் சீனாவிலிருந்து நாட்டிற்கு திரும்பிய பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது தெரியவந்தது. உடனே அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அரசின் கட்டுப்பாட்டிலிருந்த அவர், கண்காணிப்பில் இருந்து வெளியேறியதாக கூறி அவரை அந்நாட்டு அரசு சுட்டுக்கொன்றுள்ளது. அவரை அந்நாட்டு அதிபர் கிம் தான் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தங்களின் எல்லையை முதன்முதலில் வடகொரியாதான் மூடியது.