கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் 72 சதவீதம் பேர் மும்பை உள்ளிட்ட 35 பெரிய நகரங்களை சேர்ந்தவர்கள்….

 

கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் 72 சதவீதம் பேர் மும்பை உள்ளிட்ட 35 பெரிய நகரங்களை சேர்ந்தவர்கள்….

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 72 சதவீதம் பேர் மும்பை, டெல்லி மற்றும் டெல்லி உள்ளிட்ட பெரிய நகர மையங்களை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

தொற்று நோயான கொரோனா வைரஸ் நாளுக்கு வேகமாக பரவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,980ஆக இருந்தது. இதில் 72 சதவீதம் பேர் (28,761) மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட 35 பெரிய நகர ஒருங்கிணைப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள். நகர்புற ஒருங்கிணைப்பு என்பது ஒரு நகரத்தை சுற்றியுள்ள தொடர்ச்சியான நகர்புற வாழ்விடமாக அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்ச்சியான நகரங்களின் தொடர்ச்சியான புவியியல் நீளமாக வைரயறுக்கப்படுகிறது. உதாரணமாக டெல்லி நகர்புற ஒருங்கிணைப்பு பகுதியில் டெல்லி, காசியாபாத், நொய்டா, பாரிதாபாத் மற்றும் குர்கான் ஆகிய நகரங்கள் அடங்கும்.

கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரி

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 3 நகர்புற ஒருங்கிணைப்பு பகுதிகள்
கிரேட்டர் மும்பை (9,445 பேர்)
டெல்லி (4,473 பேர்) 
அகமதாபாத் (3,610 பேர்)

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களில் மட்டுமல்ல தொற்று நோயால் பலியானவர்களிலும் இந்த நகர்புற ஒருங்கிணைப்பு பகுதிகளின் பங்கு அதிகமாகும். நேற்று காலை கொரோனா வைரசுக்கு பலியானவர்களில் மொத்த எண்ணிக்கை 1,301. இதில் 75 சதவீதம் நாட்டின் பெரிய நகர்புற ஒருங்கிணைப்பு பகுதிகளான மும்பை டெல்லி உள்ளிட்ட 35 நகரங்களில் நிகழ்ந்துள்ளது.