கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது….. சர்வதேச அளவில் 17வது நாடு…

 

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது….. சர்வதேச அளவில் 17வது நாடு…

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் 20 ஆயிரத்தை தாண்டிய 17வது நாடு என்ற மோசமான மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது.

தொற்று நோயான கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிப்பதற்கான அதிகம் அதிகரித்துள்ளது ஆறுதலான தகவல்.

கொரோனா வைரஸ்

நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,083ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 645ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. மேலும் கொரோனாவால் அம்மாநிலத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 251ஆக உயர்ந்துள்ளது.

நோயாளியை பரிசோதனை செய்யும் மருத்துவர்

மகாராஷ்டிராவுக்கு அடுத்து நாட்டின் பெரிய கொரோனா ஹாட்ஸ்பாட்டாக குஜராத் உருவெடுத்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தொடுவதற்கு முறையே 35 மற்றும் 45 நாட்கள் ஆனது. ஆனால் குஜராத் 34 நாட்களில் இந்த இலக்கை எட்டியுள்ளது. குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,178ஆக உயர்ந்துள்ளது.