கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்தது…. கொரோனா வைரஸ் பட்டியலில் இணைந்த உத்தரகாண்ட் மாநிலம்….

 

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்தது…. கொரோனா வைரஸ் பட்டியலில் இணைந்த உத்தரகாண்ட் மாநிலம்….

நம் நாட்டில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 110ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் ஒருவர் தங்களது மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் முதல் முறையாக அறிக்கை அளித்துள்ளது.

சர்வதேச தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தற்போது உலக முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. நம் நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசுக்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல மாநிலங்களுக்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

மருத்துவமனையில் கொரோனா வைரஸ் வார்டு

மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110ஆக உயர்ந்துள்ளது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதும் அடங்கும். இதுவரை கேரளா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்பட நம் நாட்டில் 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

விமான நிலையங்களில் பரிசோதனை

இதுவரை மேற்கொண்ட பரிசோதனையில் நம் நாட்டை சேர்ந்த 93 பேருக்கும், வெளிநாட்டை சேர்ந்த 17 பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 பேர் கொரோனா வைரசிலிருந்து குணமாகி உள்ளனர். விமான நிலையங்களில் நேற்றுவரை 12.76 லட்சம் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.