கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது!

 

 கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது!

சீன மருத்துவ நிபுணர்கள் ஆலோசித்தும், தீவிர ஆய்வு நடத்தியும் வருகிறார்கள். இந்த நோய்க்கு இதுவரை முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. 

சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஆரம்பமான கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.  சீனாவைத் தவிர்த்து, ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன், சீன மருத்துவ நிபுணர்கள் ஆலோசித்தும், தீவிர ஆய்வு நடத்தியும் வருகிறார்கள். இந்த நோய்க்கு இதுவரை முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. 

 

 இந்நிலையில் சீனாவில்  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை  2,004 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 136 பேர் உயிரிழந்ததாகவும், 1749 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை  74,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ttn

இதற்கிடையே சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நாளை சி-17 ரக விமானத்தை அனுப்பிவைக்கிறது. இதில் மருந்துகளும் எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே வுஹானில் இருந்து 640 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில் நாளை மீண்டும் மிகப்பெரிய விமானத்தை மத்திய அரசு அனுப்பிவைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.