கொரோனா வைரஸ் பற்றி 1981ம் ஆண்டு புத்தகத்தில் தகவல்! – அதிசயிக்கும் மக்கள்

 

கொரோனா வைரஸ் பற்றி 1981ம் ஆண்டு புத்தகத்தில் தகவல்! – அதிசயிக்கும் மக்கள்

கொரோனா வைரஸ் என்பது பொதுவான பெயர். பல ஆண்டுகளாகவே கொரோனா வைரஸ் என்ற பெயர் உள்ளது. சீனாவில் வூகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமான பிறகே இப்படி ஒரு வைரஸ் இருப்பது பலருக்கும் தெரியவந்தது. உலக சுகாதார நிறுவனம் இந்த கொரோனா வைரசின் புதிய வகைக்கு தற்போதுதான் அதிகாரப்பூர்வமாக பெயரை சூட்டியுள்ளது.

ஆயிரக் கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி 1981ம் ஆண்டு வெளியான தி ஐ’ஸ் ஆஃப் டார்க்னெஸ் என்ற நாவலில் வந்துள்ளதாக பலரும் சிலாகித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் என்பது பொதுவான பெயர். பல ஆண்டுகளாகவே கொரோனா வைரஸ் என்ற பெயர் உள்ளது. சீனாவில் வூகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமான பிறகே இப்படி ஒரு வைரஸ் இருப்பது பலருக்கும் தெரியவந்தது. உலக சுகாதார நிறுவனம் இந்த கொரோனா வைரசின் புதிய வகைக்கு தற்போதுதான் அதிகாரப்பூர்வமாக பெயரை சூட்டியுள்ளது. ஆனால், கொரோனா என்பது பொது பெயர் என்பது கூட தெரியாமல் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த வைரஸ் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது என்று பல தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

corona-in-book

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பற்றி  The Eyes of Darkness என்ற 1981ம் ஆண்டு வெளியான நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பலரும் கூறிவருகின்றனர். அந்த நாவலை அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் எழுதியுள்ளார். அதில், சீன ராணுவம் ரகசியமாக உயிரி ஆயுதங்களை தயாரிப்பதாகவும், ஊகானில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரஸ் வெளிப்பட்டு பலரும் உயிரிழப்பது போலவும், இந்த வைரசுக்கு வூகான் 400 என்று பெயர் வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நாவலில் குறிப்பிட்ட தகவலை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் மணீஷ் திவாரி உள்ளிட்டவர்கள் கூட பதிவிட்டு, “சீனா உயிரி ஆயுதங்களை தயாரித்து வருகிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரகசிய உயிரி ஆயுதம் தயாரிப்பது, அந்த கிருமி வெளியேறி நகரத்தையே அழிப்பது என்று ஆயிரம் நாவல்கள், படங்கள் வந்துவிட்டன… இன்னும் இதை எல்லாம் ஆதாரமாக காட்டி பேசுவது வேடிக்கையாக உள்ளது.