கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க….. தெய்வத்துக்கு நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய நபர்…..

 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க….. தெய்வத்துக்கு நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய நபர்…..

குஜராத்தில் தொழிலாளி ஒருவர், நாக்கை காணிக்கையாக செலுத்தினால் தெய்வம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்தும் விடும் என்ற நம்பிக்கையில் தனது நாக்கை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தின் சுமேம் தாலுகாவில் நடேஸ்வரி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள பவானி மாதா கோயிலின் விரிவாக்க பணியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிற்ப தொழிலாளி விவேக் மற்றும் 8 சிற்பிகள் வேலைபார்த்து வருகின்றனர். குஜராத்தில் கடந்த 2 மாதங்களாக விவேக்கும் அவரது சகோதரர் சிவமும் வேலைபார்த்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ்

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று, தெய்வத்தை திருப்திப்படுத்தினால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் தனது நாக்கை வெட்டி காணிக்கையாக செலுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விவேக்குடன் வேலைபார்க்கும் பரிஜேஷ் சிங் சாப் கூறுகையில், காளி மாதாவின் தீவிர பக்தர் விவேக். அடிக்கடி மாதாவின் பெயரை அவர் உச்சரிப்பார். கடந்த சனிக்கிழமையன்று மார்க்கெட்டுக்கு செல்வதாக தன்னுடன்  வேலைபார்க்கும் நபரிடம் கூறிவிட்டு சென்றார்.

நாக்கை வெட்டி கொண்ட விவேக்

ரொம்ப நேரமாகியும் விவேக் திரும்பிவரவில்லை. இதனையடுத்து அவரது சகோதரர் போனில் விவேக்கை அழைத்தார். ஆனால் விவேக் போனில் பேசிய வேறு ஒரு நபர் நடேஷ்வரி கோயிலில் விவேக் நாக்கை வெட்டி கொண்ட தகவலை அவர் தெரிவித்தார். இது தொடர்பாக சுகேம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நாக்கை வெட்டி காணிக்கை செலுத்தினால் நடேஷ்வரி மாதா சாந்தமடைந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்து விடுவாள் என்ற நம்பிக்கையில் தனது நாக்கை விவேக் வெட்டியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மருத்துவமனையில் விவேக்கின் நாக்கை மீண்டும் இணைக்க மருத்துவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.