கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த திணறும் 9 மாநில அரசுகள்…. மத்திய பொது சுகாதார குழுக்களை களமிறக்கும் மத்திய சுகாதார துறை அமைச்சகம்…

 

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த திணறும் 9 மாநில அரசுகள்…. மத்திய பொது சுகாதார குழுக்களை களமிறக்கும் மத்திய சுகாதார துறை அமைச்சகம்…

மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் மொத்தம் 15 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை கட்டுப்படுத்த அம்மாநில அரசுகளுக்கு உதவதற்காக மத்திய பொது சுகாதார குழுக்களை களமிறக்க மத்திய சுகாதார துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. அதேசமயம் அந்த மாநில அரசுகள் வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் அதன் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

கொரோனா வைரஸ்

இந்த நிலையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் மொத்தம் 15 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவுதல் தீவிரமாக உள்ளதை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துறை அடையாளம் கண்டுள்ளது. அந்த மாவட்டங்களில் கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு உதவதற்காக மத்திய பொது சுகாதார குழுக்களை களமிறக்க மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முடிவு செய்துள்ளது.

பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை

மத்திய சுகாதார அமைச்சகம் தேர்வு செய்துள்ள 15 மாவட்டங்களில், மகாராஷ்டிராவின் மும்பை, புனே மற்றும் தானே மாவட்டங்களும், குஜராத்தில் அகமதாபாத் மற்றும் சூரத் மாவட்டங்களும், டெல்லயில் தென்கிழக்கு மற்றும் மத்திய டெல்லி மாவட்டங்களும் இடம் பிடித்துள்ளன. மேலும் மத்திய பிரதேசத்தின் இந்தூர் மற்றும் போபால் மாவட்டங்களும், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களும், தமிழ்நாட்டின் சென்னை மற்றும் தெலங்கானவின் ஹைதராபாத், உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மற்றும் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா ஆகிய மாவட்டங்களும் இடம் பிடித்துள்ளன. இந்த 15 மாவட்டங்களிலும் மத்திய பொது சுகாதார குழுக்களை மத்திய சுகாதார துறை அமைச்சகம் அனுப்ப உள்ளது.