கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முக கவசம் அணிவது எப்படி?

 

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முக கவசம் அணிவது எப்படி?

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாம் முககவசத்தை அணிய வேண்டியது அவசியம். முக கவசத்தை எவ்வாறு தேர்வு செய்வது என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாம் முககவசத்தை அணிய வேண்டியது அவசியம். முக கவசத்தை எவ்வாறு தேர்வு செய்வது என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்!

எந்த முகமூடி தேவை?

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் சுகாதார பணியாளர், போலீசார், செய்தியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற பணியில் ஈடுபடாதவர்களுக்கு என்95 அல்லது எப்.எப்.பி2 போன்ற உயர் ரக முக கவசங்கள் தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தொழில் வல்லுநர்களுக்கு அவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தேவையற்றவர்கள் அதை பயன்படுத்துவதை தவிர்த்தாலே போதும்.

ttn

முக கவசத்தை எவ்வாறு அணிவது?

வைரஸ் பரவலை தடுக்க முக கவசத்தை அணிவதற்கு முன்பு முக்கியமான விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதை செய்வதால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று நமக்கு ஏற்படுவதை தடுக்க முடியாது. சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கைகளை கழுவுவது மற்றும் சமூக விலகலை கடைபிடிப்பது போன்ற செயல்களையும் பின்பற்ற வேண்டும்.

முக கவசத்தை முகத்தில் அணிய வேண்டும். தாவணியைப் போல கழுத்தில் தொங்க விடக் கூடாது. நெற்றியில் அதை தொங்கவிடக் கூடாது. இத்தகைய செயல்கள் ஒருவர் அணிந்த முக கவசத்தை மற்றவர்கள் அணிவதற்கு ஒப்பானதாகும்.

முக கவசத்தை அணிவதற்கு முன் கைகளைக் கழுவ வேண்டும். அதன் பின்னர் முக கவசத்தில் உள்ள சரங்களை பிடித்து வாய், மூக்கு மற்றும் கன்னம் மீது மெதுவாகப் பொருத்தி அணிய வேண்டும். முக கவசம் வசதியாக பொருந்தும் வகையில் நாம் அணிய வேண்டியது முக்கியம். எந்தவித உறுத்தலும் இல்லாதவாறு அவற்றை அணிய வேண்டும்.

ttn

மோசமான முறையில் முக கவசத்தை அணிவதால் அது முகத்தில் இருந்து வழுக்கி செல்லக் கூடிய அசவுகரியம் ஏற்படும். இதனால் முகத்தைத் கைகளால் தொட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம். வெளியில் இருக்கும்போது முக கவசத்தை சரி செய்ய வேண்டியிருந்தால் முதலில் கைகளைக் கழுவ வேண்டும்.

சாதாரண முக கவசங்களை அதிகபட்சமாக சில மணி நேரங்களுக்கு அணியலாம். அது ஈரமாகி விட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ அந்த முக கவசத்தை குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும். விலை குறைந்த முக கவசங்களை அதிகபட்சமாக நான்கு மணி நேரங்களுக்கு மட்டுமே அணிய வேண்டும்.

அதேபோல முக கவசத்தை கழற்றும்போதும் ​​முதலில் கைகளைக் கழுவ வேண்டும். முக கவசத்தின் சரத்தை பிடித்து அதை கழற்ற வேண்டும். முக கவசத்தின் முன் பகுதியைத் தொடவே கூடாது.

ttn

முக கவசம் பயன்படுத்திய பிறகு?

ஒருமுறை பயன்படுத்தக் கூடிய முக கவசங்களை பயன்படுத்திய பிறகு அதை ஒரு மூடிய குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும். துணியால் தயாரிக்கப்பட்ட முக கவசங்களை அணிந்த பிறகு சோப்பு பயன்படுத்தி, சூரிய வெளிச்சத்தில் காய வைக்க வேண்டும்.

வாஷிங் மெஷினில் 60 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் குறைந்தது 30 நிமிடங்கள் துவைக்க விட்டு பின்னர் சூரிய வெளிச்சத்தில் அதை காய வைக்க வேண்டும்.