கொரோனா வைரஸ் பயத்தால் ஒரு வாரமாக முகத்தை தொடவில்லை – டிரம்ப் சோகம்

 

கொரோனா வைரஸ் பயத்தால் ஒரு வாரமாக முகத்தை தொடவில்லை – டிரம்ப் சோகம்

கொரோனா வைரஸ் பயத்தால் ஒரு வாரமாக முகத்தை கைகளால் தொடவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பயத்தால் ஒரு வாரமாக முகத்தை கைகளால் தொடவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது.

ttn

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனை கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அந்த கொடிய வைரஸ் பரவுவதை தடுக்கும் தீவிர நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அதிபர் டிரம்ப் ஆலோசித்தார். அப்போது அவர் பேசுகையில், “கொரோனா வைரஸ் அச்சத்தால் நான் கைகளால் என் முகத்தை தொட்டு ஒரு வாரம் ஆகிறது. அதை மிஸ் செய்கிறேன்” என்றார்.