கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிறப்பு சுவாச கருவி…….கொரோன வைரஸ் தொடர்பான செய்திகள்

 

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிறப்பு சுவாச கருவி…….கொரோன வைரஸ் தொடர்பான செய்திகள்

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிறப்பு சுவாச கருவி தயாரிப்பு உள்பட பல கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகள் சில வரிகளில்….

உத்தரகாண்ட், கோவா மற்றும் இமாச்சல பிரதேசம் உள்பட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று ஒரு கொரோனா வைரஸ் கேஸ் பதிவாகவில்லை.
புனேவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று கோவிட்-19 நோயாளிகளுக்கென பிரத்தியேகமாக ரூ.50 ஆயிரம் மதிப்பில் சுவாச கருவியை தயார் செய்துள்ளது. 

மருத்துவர்கள் மீது தாக்குதல்

மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை செய்ய சென்ற மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மீது அந்த பகுதி மக்கள் கற்கள் வீசி தாக்கினர். 
ஹைதராபாத்தில் காந்தி மருத்துவமனையில் பல்வேறு உடல் நலக்குறைவு கொண்ட 49 வயது நோயாளி கொரோனா வைரஸ் காரணமாக இறந்ததால் அவரது குடும்பத்தினர் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

சேனிடைசர், மாஸ்க்

ஒடிசாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளி குறித்து வதந்திகளை பரப்பிய பெண் உள்பட 3 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானாவை சேர்ந்த சன்ரைஸ் டயக்னோஸ்டிக் நிறுவனம் கோவிட்-19 நெருக்கடி சூழ்நிலையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு இலவசமாக மாஸ்க் மற்றும் சேனிடைசர்களை வழங்கி வருகிறது.