கொரோனா வைரஸ் நெருக்கடி…. வட்டியை குறைத்த 38 நாடுகளின் மைய வங்கிகள்… இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டியை குறைக்கும் என எதிர்பார்ப்பு…..

 

கொரோனா வைரஸ் நெருக்கடி…. வட்டியை குறைத்த 38 நாடுகளின் மைய வங்கிகள்… இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டியை குறைக்கும் என எதிர்பார்ப்பு…..

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக அண்மையில் அமெரிக்கா உள்ளிட்ட 38 நாடுகளின் மைய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்தன. இந்திய ரிசர்வ் வங்கியும் விரைவில் வட்டியை குறைக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களை தனிமைப்படுத்த தொடங்கியுள்ளன. மேலும் கொரோனா வைரஸால் பல நாடுகளில் பல்வேறு தொழில்துறைகள் முடங்கி கிடக்கிறது. இதனால் நாடுகள் ஒவ்வொன்றும் நேரடியாக பொருளாதார பாதிப்பை சந்திக்க தொடங்கி உள்ளன. கொரோனா வைரஸால் உலகம் பொருளதார மந்தநிலைக்குள் செல்கிறது என அண்மையில் சர்வதேச தரநிர்ணய நிறுவனமான எஸ்&பி நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பொருளாதார நிபுணர் ஷான் ரோச் எச்சரிக்கை செய்து இருந்தார்.

கேர் ரேட்டிங்ஸ்

இந்நிலையில் கடந்த சில வாரங்களில்,மந்த கதியில் இருக்கும் பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட 38 உலக நாடுகளின் மைய வங்கிகள் வட்டி விகித்தை குறைத்தன. அதேபோல் இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்ப்பார்ப்பு ஏற்படுள்ளது. இந்நிலையில் சர்வதேச தரநிர்ணயமான கேர் ரேட்டிங்ஸின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் இது தொடர்பாக கூறியதாவது: 

இந்திய ரிசர்வ் வங்கி

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நிறுவனங்களை மூட மற்றும் செயல்பாட்டை குறைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதா உற்பத்தி மற்றும் அனைத்து துறைகளின் வேலைவாய்ப்புகளிலும் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதுதான்  வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கியை தூண்டும். இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டம் அடுத்த மாதம் நடைபெறுகிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைக்கலாம். பணவீக்கம் குறித்த கவலைகள் இருந்தாலும் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.