கொரோனா வைரஸ் நெருக்கடி…. விமான போக்குவரத்து துறையில் 30 லட்சம் வேலைவாய்ப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம்…

 

கொரோனா வைரஸ் நெருக்கடி…. விமான போக்குவரத்து துறையில் 30 லட்சம் வேலைவாய்ப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம்…

கொரோனா வைரஸ் நெருக்கடி இந்திய விமான போக்குவரத்து துறையின் 30 லட்சம் வேலைவாய்ப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் கணித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கத்தான் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த லாக்டவுன் பல கோடி பேரின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்த பல கோடி பேர் வேலையில்லாமல் முடங்கி கிடக்கின்றனர். ஒவ்வொரு துறையின் இழப்பையும் பார்க்கும்போது பாதிப்பு மிகவும் கடுமையானது இருக்கிறது.

ஏர் இந்தியா விமானம்

லாக்டவுனால் பாதிக்கப்பட்ட முக்கிய துறைகளில் ஒன்று விமான போக்குவரத்து. லாக்டவுன் நீக்கப்பட்டாலும் விமான போக்குவரத்தை உடனடியாக தொடங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நெருக்கடியால் இந்திய விமான போக்குவரத்து துறையில் மட்டும் 30 லட்சம் வேலைவாய்ப்புகளில் சாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தும்  அபாயம் உள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் கணித்துள்ளது.

விமான பெண் பணியாளர்கள்

சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் இது குறித்து கூறுகையில், கொரோனா வைரஸ் நெருக்கடி இந்திய விமான போக்குவரத்து துறையின் 30 லட்சம் வேலைவாய்ப்புகளில் சாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தும். 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் விமான பயணம் 50 சதவீதம் குறையும். 2020ம் ஆண்டில் விமான பயணிகளின் எண்ணிக்கை 8.9 கோடி குறையும். விமான நிறுவனங்களின் வருவாயும் கணிசமான அளவு சரிவடையும் என தெரிவித்துள்ளது.