கொரோனா வைரஸ் நிவாரணமாக நிதியுதவி வழங்கிய நடிகர் லாரன்ஸ்க்கு நன்றி தெரிவிக்கும் வாய் பேச முடியாத பெண்!

 

கொரோனா வைரஸ் நிவாரணமாக நிதியுதவி வழங்கிய நடிகர் லாரன்ஸ்க்கு நன்றி தெரிவிக்கும் வாய் பேச முடியாத பெண்!

நடிகர் லாரன்ஸ் செய்த உதவிக்கு வாய் பேச முடியாத பெண் ஒருவர் நன்றி சொல்லியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

நடிகர் லாரன்ஸ் செய்த உதவிக்கு வாய் பேச முடியாத பெண் ஒருவர் நன்றி சொல்லியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

நடிகரும், நடன இயக்குநருமான லாரன்ஸ் தன்னால் முடிந்த வரை பலருக்கு உதவி வருகிறார். கொரோனா வைரசை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு லாரன்ஸ் நிதியுதவி வழங்கியுள்ளது. மேலும் கஷ்டப்படுபவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களையும் வழங்கி வருகிறார். 

இதனிடையே நடிகர் லாரன்ஸ் சார்பில் வழங்கப்பட்ட மளிகை பொருட்களை வாங்கி கொண்ட வாய் பேச முடியாத பெண் ஒருவர், சைகை மொழியில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மனதை உருக்கும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.