கொரோனா வைரஸ் – நடிகை திரிஷா வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ

 

கொரோனா வைரஸ் – நடிகை திரிஷா வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முறை குறித்த, நடிகை திரிஷா பேசும் விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் பல பிரபலங்கள் பேசி வருகின்றனர். இந்த நேரத்தில் அச்சத்தை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் குறிப்பாக  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நடிகை திரிஷா கரோனா வைரஸ் விழுப்புணர்வு பற்றி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

trisha

யூனிசெப் இந்தியாவின் நல்லெண்ண தூதரான திரிஷா ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில், “உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் வைரஸ் பாதிப்பிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது” என்ற தலைப்பில் 1 நிமிடத்திற்கு பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பற்றி அச்சம் தேவையில்லை, அதேசமயம் பாதுகாப்பாக இருங்கள் எனவும் கூறியுள்ளார். இந்த வீடியோவை யுனிசெப், தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.