கொரோனா வைரஸ்: தியாகராய நகரில் அனைத்து கடைகளும் மூடல் – வெறிச்சோடிய ரங்கநாதன் தெரு

 

கொரோனா வைரஸ்: தியாகராய நகரில் அனைத்து கடைகளும் மூடல் – வெறிச்சோடிய ரங்கநாதன் தெரு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டது.

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை வரும் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல சென்னையில் அதிகளவு மக்கள் கூடும் பெரிய கடைகளையும் மூட மாநகராட்சியால் உத்தரவிடப்பட்டுள்ளது.

ttn

அந்த வகையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மக்கள் கூட்டம் நெருக்கமாக காணப்படும் ரங்கநாதன் தெரு வெறிச்சோடியது. மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருவதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள் மற்றும் மால்களை முன்னெச்சரிக்கையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.