கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஐ.சி.எஸ்.சி, ஐ.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஐ.சி.எஸ்.சி, ஐ.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளும், தேதி அறிவிப்பின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவி வருவதால், இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாகப் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. அதே போல, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளும், தேதி அறிவிப்பின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ttn

இந்நிலையில், ஐ.சி.எஸ்.சி, ஐ.எஸ்.சி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஐ.எஸ்.சி.இ. பள்ளி கவுன்சிலின் தலைமைச் செயலாளர் ஜெர்ரி அராத்தூன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் (COVID-19) நாடு முழுவதும் பரவி வருவதையும், காற்றில் எளிதில் பரவும்  தன்மையையும் கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலனுக்காக 2020 ஆம் ஆண்டு மார்ச் 19 முதல் மார்ச் 31 வரை நடக்கவிருந்த 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள்  நடத்தப்படும் தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.