கொரோனா வைரஸ் குறித்து பயப்பட வேண்டாம் – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

 

கொரோனா வைரஸ் குறித்து பயப்பட வேண்டாம் – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் குறித்து பயப்பட வேண்டியதில்லை என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லி: கொரோனா வைரஸ் குறித்து பயப்பட வேண்டியதில்லை என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சீனா, இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

ttn

இந்த நிலையில், கொரோனா வைரஸ் குறித்து பயப்பட வேண்டியதில்லை என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள் பலத்த சோதனைக்கு பிறகே இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸை தடுக்க பல்வேறு துறைகளும், மாநில அரசுகளும் இணைந்து செயலாற்றி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.