கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இத்தாலியில் முதன்முறையாக ஒருவர் பலி

 

கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இத்தாலியில் முதன்முறையாக ஒருவர் பலி

கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு முதன்முறையாக இத்தாலியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரோம்: கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு முதன்முறையாக இத்தாலியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2345 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 109 பேர் உயிரிழந்து உள்ளனர். ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மக்காவ், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு முதன்முறையாக இத்தாலியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 78 வயதான முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கொரோனா வைரஸ் பீதி காரணமாக இத்தாலியின் வடக்கு மண்டலத்தில் உள்ள 10 நகரங்களில் உள்ள பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.