கொரோனா வைரஸ்: ஒலிம்பிக் 2020 ஒத்திவைக்கப்படலாம் என எதிர்பார்ப்பு

 

கொரோனா வைரஸ்: ஒலிம்பிக் 2020 ஒத்திவைக்கப்படலாம் என எதிர்பார்ப்பு

2020 ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கியோ: 2020 ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார அவசர நிலைஎன்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ttn

இந்த நிலையில், 2020 ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் சரியாக 4 மாதங்கள் மட்டுமே உள்ளதால் அதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும்பட்சத்தில் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.