கொரோனா வைரஸ்: ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி பொதுநல வழக்கு

 

கொரோனா வைரஸ்: ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி பொதுநல வழக்கு

கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகளுக்கு தடை கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகளுக்கு தடை கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் 29-ஆம் தேதி தொடங்கி மே 24-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஐபிஎல் தொடரில் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 2 போட்டிகள் நடைபெறும். மேலும் லீக்  போட்டிகள்  44 நாட்களுக்கு பதிலாக 50 நாட்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான லீக் போட்டிகள் இரவு 8 மணிக்கு தொடங்கும். இரண்டு போட்டிகள்  நடக்கும் நாட்களில் மாலை 4 மணிக்கு முதல் போட்டி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ttn

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக தலைகாட்ட தொடங்கியிருப்பதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படக் கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் அதுபோன்ற ஒரு முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.