கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் ரூ.1,500 கோடியை செலவிடும் டாடா குழுமம்….

 

கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் ரூ.1,500 கோடியை செலவிடும் டாடா குழுமம்….

கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைக்கு டாடா டிரஸ்ட்ஸ் ரூ.500 கோடியும், டாடா சன்ஸ் ரூ.1,000 கோடியும் செலவிட உள்ளதாக உறுதி அளித்துள்ளன.

டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் ரத்தன் டாடா தனது டிவிட்டரில் டாடா டிரஸ்ட்ஸ் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைக்கு ரூ.500 கோடி வழங்க இருக்கும் தகவலை பதிவு செய்துள்ளார். அதில், கோவிட்-19 நெருக்கடி ஒரு இனமாக நாம் எதிர்கொள்ள இருக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று. டாடா டிரஸ்ட்ஸ் மற்றும் டாடா குழும நிறுவனங்கள் கடந்த காலங்களில் தேசத்தின் தேவைகளுக்கு முன்வந்தன. இந்த நேரத்தின் தேவை மற்ற எந்த நேரங்களை காட்டிலும் அதிகமாக உள்ளது.

கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் செலவிடல்

இந்த நிதி மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சுவாச அமைப்புகள், சோதனைகருவிகள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை வசதிகளை அமைப்பதற்காக பயன்படுத்தப்படும் என ரத்தன் டாடா பதிவு செய்துள்ளார்.

டாடா சன்ஸ்

டாடா சன்ஸ் நிறுவனம் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ரூ.1000 கோடி செலவிட உள்ளதாக உறுதி அளித்துள்ளது. டாடா சன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாடா டிரஸ்ட்ஸ்வுடன் இணைந்து செயல்படுவோம் மற்றும் தலைவர் மிஸ்டர் டாடாவின் முன்முயற்சிகளை முழுமையாக ஆதரவு அளிப்போம். குழுமத்தின் முழுநிபுணத்தையும் கொண்டு வருவதற்கு ஒத்துழைப்புடன் செயல்படும் என தெரிவித்துள்ளது.