கொரோனா வைரஸ் எதிரொலி – 27 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லா கட்டாய விடுப்பு கொடுத்த விமான நிறுவனம்

 

கொரோனா வைரஸ் எதிரொலி – 27 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லா கட்டாய விடுப்பு கொடுத்த விமான நிறுவனம்

கொரோனா வைரஸ் பாதிப்பால் நஷ்டத்தை சந்தித்து வரும் கேத்தே பசிபிக் விமான நிறுவனம் 27 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுத்துள்ளது.

ஹாங்காங்: கொரோனா வைரஸ் பாதிப்பால் நஷ்டத்தை சந்தித்து வரும் கேத்தே பசிபிக் விமான நிறுவனம் 27 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுத்துள்ளது.

சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 563 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 73 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சீன மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். சீனாவில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை தற்காலிகமாக மூடியுள்ளன. வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும்படி தங்களது ஊழியர்களை அறிவுறுத்தி உள்ளன.

cathay

இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் இருந்து புறப்படும் மற்றும் சீனாவுக்கு செல்லும் விமானங்களை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்து விட்டன. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. அந்த வகையில் ஹாங்காங்கை சேர்ந்த கேத்தே பசிபிக் விமான நிறுவனம் கொரோனா வைரசால் மீண்டும் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 27 ஆயிரம் ஊழியர்களை ஊதியம் இல்லா விடுப்பு எடுத்துக் கொள்ள அதன் நிர்வாகம் கேட்டுக் கொண்டு உள்ளது.