கொரோனா வைரஸ் எதிரொலி: வீட்டிலிருந்தே வேலை செய்ய ஊக்குவிக்கும் வகையில் ஏசிடி பைபர்நெட் அதிரடி சலுகை

 

கொரோனா வைரஸ் எதிரொலி: வீட்டிலிருந்தே வேலை செய்ய ஊக்குவிக்கும் வகையில் ஏசிடி பைபர்நெட் அதிரடி சலுகை

வீட்டிலிருந்தே வேலை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பிரபல ஏசிடி பைபர்நெட் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

பெங்களூரு: வீட்டிலிருந்தே வேலை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பிரபல ஏசிடி பைபர்நெட் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றன. தற்போது அதை ஊக்குவிக்கும் வகையில் பிரபல ஏசிடி பைபர்நெட் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி உச்சபட்ச வரம்பில்லாத அதிவேக இன்டர்நெட்டை மார்ச் 31-ஆம் தேதி வரை பயனர்கள் பயன்படுத்த முடியும். மேலும் நொடிக்கு 300 எம்.பி என்ற வகையில் அதிவேக இன்டர்நெட் சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு ஏசிடி பைபர்நெட் வழங்குகிறது.

ttn

ஏசிடி பைபர்நெட் வாடிக்கையாளர்கள் அதன் மொபைல் ஆப்-ஐ லாகின் செய்து செட்டிங்கில் இன்டர்நெட் வேகம் மற்றும் வரம்பு தொடர்பாக அதிகரித்துக் கொள்ளலாம். இந்த அறிவிப்பை ஏசிடி பைபர்நெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இ-மெயில் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தெரிவித்துள்ளது.