கொரோனா வைரஸ் எதிரொலி: ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரம்! 

 

கொரோனா வைரஸ் எதிரொலி: ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரம்! 

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வைராஸால் இந்தியாவில் 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் கூடுவதை தவிர்க்குமாறும் பயணங்களை தவிர்க்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Train
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்னக ரயில்வே பல ரயில்களை ரத்து செய்திருப்பதாக அறிவித்துள்ளது. 

ரத்துசெய்யப்பட்ட ரயில்கள்:

* செங்கோட்டை – கொல்லம், கொல்லம் – புனலூர், காரைக்குடி – விருதுநகர், காரைக்குடி – திருச்சி, திருச்சி – மானாமதுரை ஆகிய பயணிகள் ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து

* குருவாயூர் – புனலூர் ரயில் கொல்லம் – புனலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

* மார்ச் 26ம் தேதி இயக்கவிருந்த ஜபல்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் இரு மார்க்கங்களிலும் ரத்து.