கொரோனா வைரஸ் எதிரொலி: மெக்காவுக்கு செல்ல விசா அனுமதி கிடைக்காது – சவுதி அரேபியா அதிரடி நடவடிக்கை

 

கொரோனா வைரஸ் எதிரொலி: மெக்காவுக்கு செல்ல விசா அனுமதி கிடைக்காது – சவுதி அரேபியா அதிரடி நடவடிக்கை

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய புனித தலமான மெக்காவுக்கு செல்ல வெளிநாட்டு பயணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மெக்கா: சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய புனித தலமான மெக்காவுக்கு செல்ல வெளிநாட்டு பயணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது பெருமளவு குறைய தொடங்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2744 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ttn

இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய புனித தலமான மெக்காவுக்கு செல்ல வெளிநாட்டு பயணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் பாதித்துள்ள நாடுகளில் இருந்து மெக்காவுக்கு வரும் பயணிகளுக்கு விசா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.