கொரோனா வைரஸ் எதிரொலி; பெய்ஜிங்கில் குடியரசு தின விழாவை ரத்து செய்தது இந்திய தூதரகம்

 

கொரோனா வைரஸ் எதிரொலி; பெய்ஜிங்கில் குடியரசு தின விழாவை ரத்து செய்தது இந்திய தூதரகம்

கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால் பெய்ஜிங்கில் இந்திய குடியரசு தின விழாவை இந்திய தூதரகம் ரத்து செய்துள்ளது.

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால் பெய்ஜிங்கில் இந்திய குடியரசு தின விழாவை இந்திய தூதரகம் ரத்து செய்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 25 பேர் பலியாகி உள்ளதாகவும், 830 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால் பெய்ஜிங்கில் நடைபெற இருந்த இந்திய குடியரசு தின விழாவை இந்திய தூதரகம் ரத்து செய்துள்ளது. 71-வது குடியரசு தின விழாவை பெய்ஜிங்கில் கோலாகலமாக கொண்டாட இந்திய தூதரகம் முடிவு செய்திருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் அது ரத்து செய்யப்பட்டிருப்பது அங்கு வாழும் இந்தியர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.