கொரோனா வைரஸ் எதிரொலி: டோக்கியோ டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்கா தற்காலிகமாக மூடல்

 

கொரோனா வைரஸ் எதிரொலி: டோக்கியோ டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்கா தற்காலிகமாக மூடல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

டோக்கியோ: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 13 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் 2022 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 256 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது உலக மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

japan

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள டிஸ்னிஸீ பூங்காவும் மூடப்பட்டது. பிப்ரவரி 29 முதல் மார்ச் 15 வரை இரண்டு வார காலம் இந்த பூங்கா மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஜப்பான் அரசு அறிவுறுத்தியதன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.