கொரோனா வைரஸ் எதிரொலி! சீனர்களுக்கு இ-விசா கிடையாது… இந்திய தூதரகம் தகவல்..

 

கொரோனா வைரஸ் எதிரொலி! சீனர்களுக்கு இ-விசா கிடையாது… இந்திய தூதரகம் தகவல்..

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், சீனர்கள் மற்றும் அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இ-விசா வசதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கு செல்ல வேண்டாம் என பல நாடுகள் தங்களது மக்களிடம் அறிவுறுத்தியுள்ளன. மேலும், சீனாவிலிருந்து பிலிப்பைன்ஸ் சென்ற 44 வயதான சீன ஒருவர் நேற்று இறந்தார். 

சீனாவில் உள்ள இந்திய தூதரகம்

இந்நிலையில் சீனாவில் உள்ள இந்திய தூதரகம் இந்தியா செல்வதற்கான இ-விசா வசதியை தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய சில முன்னேற்றங்கள் காரணமாக, இந்தியாவுக்கு பயணம் செல்வதற்கான இ-விசா வசதி தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் இது உடனடியாக அமலுக்கு வருகிறது. சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இது பொருந்தும்.

சீன மருத்துவனை

மேலும், கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் ஏற்கனவே வழங்கப்பட்ட இ-விசாகளும் ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம் இந்தியாவுக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்பவர்கள் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அல்லது ஷாங்காய் அல்லது குவாங்சோவில் உள் இந்திய தூதரகங்கள் மற்றும் இந்த நகரங்களில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.