கொரோனா வைரஸ் எதிரொலி: சினிமா படப்பிடிப்புகள் ரத்து

கொரோனா வைரஸ் எதிரொலி: சினிமா படப்பிடிப்புகள் ரத்து

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் 119 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

RK selvamani

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா பயத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது, காட்டு தீயை போல் வேகமாக பரவும் அபாயம் உள்ளது. ஆரம்பத்திலேயே இதனை கட்டுப்படுத்த வேண்டும். மற்ற துறைகளை ஒப்பிட்டு பார்க்கும் போது சினிமா துறையில் சுகாதார வசதி குறைவாக உள்ளது.கொரோனா வைரஸ் கொரோனா எதிரொலியால் தமிழகத்தில் மார்ச் 19ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை திரைப்படத்துறை, சின்னத்திரை, விளம்பரத்துறை உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு தொடர்பாக எந்தவிதமான பணிகளிலும் ஈடுபட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.