கொரோனா வைரஸ் எதிரொலி: இலங்கையில் பொது விடுமுறை அறிவிப்பு!

 

கொரோனா வைரஸ் எதிரொலி: இலங்கையில் பொது விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தானில் 4 பேரும், டெல்லியில் 6 பேரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

ttn

இந்தியாவில் கொரோனா வைரஸால் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 38 பேருக்கும், கேரளாவில் 24 பேருக்கும், ஹரியானாவில் 14 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று  உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 14 பேரும், கர்நாடகாவில் 7 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும், டெல்லியில் 6 பேரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

tn

அதே சமயம் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், பூடான் போன்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் 3 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இதன் மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு  வரும் 19 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில்,  29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.