கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் தொற்றுநோயாக மாறும்………. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் தொற்றுநோயாக மாறும்………. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

சீனாவில் உருக்குலைத்து வரும் கொடிய கொரோனா வைரஸ் தற்போது மற்ற உலக நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இத்தாலி, இந்தியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியா என 100 நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் தனது தாக்குதலை நடத்தி வருகிறது. கொரோனா வைரசுக்கு இதுவரை உலகம் முழுவதுமாக மொத்தம் 3,800க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

தற்போது கொடிய கொரோனா வைரஸின் உலகளாவிய பரவல் ஒரு தொற்றுநோயாக மாறும் என்ற ஒரு உண்மையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

who

சீனாவில் உருக்குலைத்து வரும் கொடிய கொரோனா வைரஸ் தற்போது மற்ற உலக நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இத்தாலி, இந்தியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியா என 100 நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் தனது தாக்குதலை நடத்தி வருகிறது. கொரோனா வைரசுக்கு இதுவரை உலகம் முழுவதுமாக மொத்தம் 3,800க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona-virus-190

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயாக மாறும் அபாயம் உள்ளதாக நேற்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது கொடிய கொரோனா வைரஸின் உலகளாவிய பரவல் தொற்றுநோயாக மாறும் என்ற ஒரு உண்மையான அச்சுறுத்தல் உள்ளது. ஆனால் அந்த வைரஸை இன்னும் கட்டுப்படுத்த முடியும். இது வரலாற்றில் கட்டுப்படுத்தக்கூடிய முதல் தொற்றுநோயாக இருக்கும். நாம் வைரஸின் கருணையில் இல்லை என தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் இந்த ஆண்டில் உலக பொருளாதாரத்தில் 1 லட்சம் கோடி டாலர் முதல் 2 லட்சம் கோடி டாலர் அளவுக்கு பாதிப்பு ஏற்படும். இதன் தாக்கத்தை குறைக்க உலக நாடுகள் செலவினங்களை அதிகரிக்க  வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்