கொரோனா வைரஸ்: இந்திய வம்சாவளியை சேர்ந்த எச்.ஐ.வி விஞ்ஞானி கீதா ராம்ஜி காலமானார்

 

கொரோனா வைரஸ்: இந்திய வம்சாவளியை சேர்ந்த எச்.ஐ.வி விஞ்ஞானி கீதா ராம்ஜி காலமானார்

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய வம்சாவளியை சேர்ந்த எச்.ஐ.வி விஞ்ஞானி கீதா ராம்ஜி காலமானார்.

கேப்டவுன்: கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய வம்சாவளியை சேர்ந்த எச்.ஐ.வி விஞ்ஞானி கீதா ராம்ஜி காலமானார்.

உலக புகழ்பெற்ற வைராலஜிஸ்ட் கீதா ராம்ஜி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவால் இறந்த முதல் இந்திய வம்சாவளி தென் ஆப்பிரிக்கராக கீதா ராம்ஜி உள்ளார். தடுப்பூசி விஞ்ஞானியும் எச்.ஐ.வி தடுப்பு ஆராய்ச்சித் தலைவருமான கீதா ராம்ஜி, ஒரு வாரத்திற்கு முன்பு லண்டனில் இருந்து திரும்பியிருந்தார். ஆனால் அப்போது அவருக்கு கோவிட்-19 அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

Gita Ramjee

கிட்டத்தட்ட 50 வயதுடைய ராம்ஜி, டர்பனில் உள்ள தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (எஸ்.ஏ.எம்.ஆர்.சி) அலுவலகங்களின் மருத்துவ பரிசோதனை பிரிவு முதன்மை ஆய்வாளராகவும், எச்.ஐ.வி தடுப்பு ஆராய்ச்சி பிரிவின் பிரிவு இயக்குநராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.